முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூக்கு கயிறாகும் 'ஸ்டெதாஸ்கோப்' ! மருத்துவ துறைக்கு அவசர சிகிச்சை அவசியம் தேவை..!

அறுவைச் சிகிச்சையின் மேற்கொள்ளும் பொழுதோ, விபத்தின் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு 'இரத்த தானம்' செய்வது அவசியமாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நமது இந்திய தேசத்தின் மொத்த இரத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும். ஒரு யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும். ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை. ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை உள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 10 க்கும் அதிகமான நபர்களுக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது.  கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும்  இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருந்தாலும், அநேகர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் அவ்வமைப்புகள் அவ்வப்போது இரத்தக்கொடை நிகழ்ச்சிகளை நடத்தும் போது இரத்த தானம் செய்கின்றனர். இரத்த தான முகாம்களிலிருந்து பெறப்படும் இரத்த...

ஆடு தாண்டும் காவிரி (மேக்கேதாட்டூ) அணை அனையா நெருப்பு..!!

         கர்நாடக மாநிலம், ராம்நகர்  மாவட்டம், மேக்கேதாட்டு! இங்கு காவிரி ஆறு ஓடக்கூடிய இரு மலைகளுக்கு இடையிலான இடைவெளி மிகவும் குறைவு. ஆழம் மிகவும் அதிகம். மேக்கேதாட்டு என்றால் தமிழில் ஆடு தாண்டும் காவிரி என்று பொருள். இந்த இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, இரு மலைகளுக்கு இடையே அணை கட்ட, கடந்த பல ஆண்டுகளாக கர்நாடக ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். அவ்வாறு அணை கட்டப்பட்டால் அதன் கொள்ளளவு 67.14 டி.எம்.சி-யாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அணையா?  நீர்த்தேக்கமா? : தமிழ்நாடு உள்ளிட்ட  கீழ்ப்பாசன மாநிலங்களிடமிருந்து அணை என்று சொன்னால் எதிர்ப்புகள் கிளம்பும், அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படும்  என்பதால் பெங்களூரு மற்றும் மாண்டியாவின் குடிநீர்த் தேவைக்காகவும், நீர்மின் உற்பத்திக்காகவும் மேக்கேதாட்டுவில் நீர்த்தேக்கம் அமைக்கப்போவதாக சொன்னது கர்நாடகம். அன்றைய முதல்வராக இருந்த சித்தராமைய்யா, 2013-ம் ஆண்டு, ₹5912 கோடி திட்டமதிப்பீட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஆய்வுப் பணிகளுக்கு அனுமதி கேட்டு 12.11.2014 அன்று மத்திய சு...

நாகூர் மணல்மேடு பகுதியில் குடிசைகளுக்கு மஜக சார்பில் தார்பாய்கள் விநியோகம்..!

நாகை.டிச.16., கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் வகையில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான மு.தமிமுன்அன்சாரி MA., MLA., அவர்களின் உத்தரவின் பேரில், பல்வேறு கட்டங்களாக நிவாரண உதவிகளை மஜகவின் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணிக் குழு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. நாகூரில், மணல்மேடு பகுதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்டு மழையில் ஒழுகும் குடிசைகளுக்கு இன்று (09.12.18)  தார்பாய்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் தலைமையில் விநியோகம் செய்யப்பட்டது. மஜக பேரிடர் மீட்பு குழு நாகை முகாம் பொறுப்பாளர் S.சதக்கத்துல்லாஹ், செய்யது இப்ராகிம், பாவா ஆகியோர் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். தகவல்; மஜக பேரிடர் மீட்பு குழு, நாகை முகாம், டெல்டா மண்டலம். #gajacyclonerelief