அறுவைச் சிகிச்சையின் மேற்கொள்ளும் பொழுதோ, விபத்தின் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு 'இரத்த தானம்' செய்வது அவசியமாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நமது இந்திய தேசத்தின் மொத்த இரத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும். ஒரு யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும். ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை. ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை உள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 10 க்கும் அதிகமான நபர்களுக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது. கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருந்தாலும், அநேகர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் அவ்வமைப்புகள் அவ்வப்போது இரத்தக்கொடை நிகழ்ச்சிகளை நடத்தும் போது இரத்த தானம் செய்கின்றனர். இரத்த தான முகாம்களிலிருந்து பெறப்படும் இரத்த...
எட்டுத்திக்கிழும் எட்டும் வரையிலும் மனிதநேயத்தைப் பரப்பிடுவோம்..!