முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டநகல் கிழிப்பு போராட்டம்! தடையை மீறிய மஜகவினர் கைது!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்டத்தின் சார்பில் டிச.15 அன்று நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமையில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாநில தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல்துறை கெடுபிடிகளை மீறி குடியுரிமை சட்ட நகலை கிழித்தெறிந்தனர். இதில், மாவட்ட துணை செயலாளர்கள் முன்ஸி யூசுப்தீன், கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, சேக் அகமதுல்லாஹ், சபுருதீன், மு.மாவட்ட நிர்வாகி திருப்பூண்டி சாகுல் ஹமீது, மாவட்ட அணி நிர்வாகிகள் தெத்தி ஆரிப், சுல்தான், கீழையூர் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, நகர செயலாளர்கள் அஜீஜுர் ரஹ்மான், அபுசாலி சாஹிப், திட்டச்சேரி பேரூர் கழக செயலாளர் இபுராஹீம், ஷேக்பரீத், திருப்பூண்டி இப்ராஹீம், அஜீஸ், ஜாசிம், பொருள்வை ஜலால், மஞ்சை சதாம், வவ்வாலடி அன்சாரி, தோப்புத்துறை முபீன்,...

அனைவருக்கும் பொதுவானவர் நபிகள் நாயகம்! (திருச்சியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேச்சு!)

நவ. 25, திருச்சி - தென்னூர் வட்டார ஜமாத்துல் உலமா நடத்திய மீலாது சமூக நல்லிணக்க விழாவில் , கலந்துக் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA உரையாற்றினார்.அவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:- "இந்த சமூக நல்லிணக்க விழாவை இனி திறந்த வெளியில் நடத்திட நீங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேடையில் பேசுபவர்களிலும், பார்வையாளர்களிலும் சரி பாதியாக சகோதர சமூகங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்குமாறு திட்டமிட்டால், அது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த வருடம் இது போன்ற ஒன்று கூடலை எல்லோரும் சேர்ந்து உழவர் சந்தை திடலில் நடத்திட வேண்டும் என என் ஆவலை தெரிவித்துக் கொள்கிறேன். மீலாது விழா என்பது குறித்த  விவாதத்திற்குள் நாங்கள் செல்வதில்லை. அது இந்தியா போன்ற பன்மை கலாச்சார தேசங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புகளை எல்லோரிடமும் கொண்டு செல்ல இதுவும் ஒரு களம் என்று கருதுகிறோம். அதனால்தான் இதனை மீலாது சமூக நீதி விழா, மீலாது சமூக நல்லிணக்க பெருவிழா,சீரத்துன் நபி விழா என்ற பெயர்களில், எல்லா சமூக மக்களும் பங்கேற்கும் வக...

படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும்! ('கவிதை தேன்' நூல் வெளியீட்டு விழாவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேச்சு)

கவிஞர் காரை ஜின்னா அவர்கள் எழுதிய "கவிதை தேன்" என்ற நூலை நாகூரில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட, இந்திய தேசிய லீக்கின் அகில இந்திய பொதுச் செயலாளர் MGK நிஜாமுதீன் பெற்றுக் கொண்டார். நூலை வெளியிட்டு பொதுச் செயலாளர் பேசியதாவது:- நூல் வெளியீட்டு விழாக்கள் குறைந்து வருவதும், அதில் பார்வையாளர்கள் குறைந்து வருவதும் ஆரோக்கியமான விஷயமல்ல. அது போல், நூல் வாசிப்பாளர்கள் எண்ணிக்கையும்  குறைந்து வரும் நிலையில், படைப்பாளிகளின்  எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. முதிர்ச்சிமிக்க சமூக அமைப்பில் இது  குறித்து ஆராய வேண்டும். கவலைப்பட வேண்டும். நூல் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்  என கருதி பலரும் அஞ்சும் நிலை உருவாகி  உள்ளது. மலையாளம், வங்கம், மராட்டிய மொழிகளில் நூல்கள் வெளியாகி, ஒரே வருடத்தில் பல பதிப்புகளை காணுகின்றன. தமிழில் அந்த நிலை குறைந்து வருகிறது. தமிழக முஸ்லிம் சமூகம் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பணி ஆற்றியுள்ளது. தற்போது இதில் ஒரு சுணக்கம் நிலவுகிறது. நாகூர் என்பது  பல கவிஞர்களை, இலக்கியவாதிகளை, எழுத்தாளர்களை, கலை படைப்பா...

நாகை மாவட்ட ஆட்சியரிடத்தில் மதுவிலக்கு கோரி மஜக மனு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டம் சார்பில் தெற்கு மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமையில் கடந்த அக்.14, திங்கள்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நாகை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.பிரவீன்.பி.நாயர்., இ.ஆ.ப அவர்களை சந்தித்து பூரண மதுவிலக்கு கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் பொது மக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மார்க் கடை குறித்து மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் கலந்து கொண்டார். உடன் மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, மஹ்மூது இபுராகிம், நாகூர் நகர செயலாளர் அபுசாலி சாஹிப், நாகூர் ஜாகிர் ஹூசைன், சாகுல் ஹமீது ஆகியோர் இருந்தனர்.

நாகூரில் பெரும் வரவேற்புக்கு மத்தியில் மது எதிர்ப்பு பரப்புரை!

உள்ளூர் மற்றும் வெளியூர் கூட்டத்தால் நிரம்பி வழிந்த புகழ் பெற்ற சுற்றுலா தளமான நாகூரில், இன்று மது எதிர்ப்பு பரப்புரையை அக்.11 அன்று பெரும் எழுச்சியோடு மஜக வினர் நடத்தியுள்ளனர். உறுதி மொழி ஏற்பு, ஆட்டோ பரப்புரை, துண்டு பிரசுர விநியோகம், வீதி சந்திப்புகள் என அனல் பறக்க இயங்கினர். நாகூர் தர்கா அலங்கார வாசலில்  பரப்புரையை உறுதி மொழி வாசித்து மஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பெரியக்கடை தெரு, கொத்தவால் சாவடி, மெயின்ரோடு, ஆஸ்பத்திரி ரோடு, பழைய பேரூந்து நிலையம், நெல்லுக்கடை தெரு, மீன் மார்கெட், தர்கா மார்கெட் லைன் என பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். முத்தாய்ப்பாக, நாகூர் காவல் நிலையம், நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் என அரசாங்க ஊழியர்களுக்கும், அங்கு வருகை தந்த பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பிரசுரங்களை பெற்று கொண்டவர்கள் அருகாமையில் புதுச்சேரி மாநில எல்லை உள்ளதால் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் வழி தவறிபோ...

பழி தீர்க்க படுகிறாரா ரஞ்சன் கோகாய் ?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் ரஞ்சன் கோகாய். இவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46 வது தலைமை நீதிபதியாக 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி பதவியேற்றார். இவரது தந்தை அசாமின் முன்னாள் முதலமைச்சர் கெசாப் சந்திர கோகாய் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெசாப் சந்திர கோகாய் கடந்த 1982 ஆம் ஆண்டு அசாமின் முதலமைச்சராக இருந்தார். தங்களது சொத்து விவரங்களை வெளியிட்ட 11 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ரஞ்சன் கோகாய்யும் ஒருவர். அத்தோடு தனது சொத்து விவரங்களை தவறாமல் ரஞ்சன் புதுப்பித்து வருகிறார். அவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தலைமை நீதிபதி மீது வைக்கப்பட்ட இந்த பாலியல் குற்றச்சாட்டு, நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ...