மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டம் சார்பில் தெற்கு மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமையில் கடந்த அக்.14, திங்கள்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நாகை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.பிரவீன்.பி.நாயர்., இ.ஆ.ப அவர்களை சந்தித்து பூரண மதுவிலக்கு கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் பொது மக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மார்க் கடை குறித்து மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் கலந்து கொண்டார். உடன் மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, மஹ்மூது இபுராகிம், நாகூர் நகர செயலாளர் அபுசாலி சாஹிப், நாகூர் ஜாகிர் ஹூசைன், சாகுல் ஹமீது ஆகியோர் இருந்தனர்.
எட்டுத்திக்கிழும் எட்டும் வரையிலும் மனிதநேயத்தைப் பரப்பிடுவோம்..!