உள்ளூர் மற்றும் வெளியூர் கூட்டத்தால் நிரம்பி வழிந்த புகழ் பெற்ற சுற்றுலா தளமான நாகூரில், இன்று மது எதிர்ப்பு பரப்புரையை அக்.11 அன்று பெரும் எழுச்சியோடு மஜக வினர் நடத்தியுள்ளனர்.
உறுதி மொழி ஏற்பு, ஆட்டோ பரப்புரை, துண்டு பிரசுர விநியோகம், வீதி சந்திப்புகள் என அனல் பறக்க இயங்கினர்.
நாகூர் தர்கா அலங்கார வாசலில் பரப்புரையை உறுதி மொழி வாசித்து மஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பெரியக்கடை தெரு, கொத்தவால் சாவடி, மெயின்ரோடு, ஆஸ்பத்திரி ரோடு, பழைய பேரூந்து நிலையம், நெல்லுக்கடை தெரு, மீன் மார்கெட், தர்கா மார்கெட் லைன் என பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
முத்தாய்ப்பாக, நாகூர் காவல் நிலையம், நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் என அரசாங்க ஊழியர்களுக்கும், அங்கு வருகை தந்த பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
பிரசுரங்களை பெற்று கொண்டவர்கள் அருகாமையில் புதுச்சேரி மாநில எல்லை உள்ளதால் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் வழி தவறிபோவதாக கூறி தொடர்ந்து இப்பரப்புரையை முன்னெடுக்க வேண்டி கோரிக்கை விடுத்தனர்.
கேரள, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்கள் வெள்ளி மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விட பெருமளவில் திரண்டிருந்தனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் மஜகவினரின் பிரச்சாரத்தை வெகுவாக ரசித்தனர்.
சிலர் கட்சி பெயர், கொடி குறித்து விசாரித்தனர். அவர்கள் தாய் மொழியில் பிரசுரங்கள் குறித்து எடுத்து சொன்னதும் கேட்டு பாராட்டிவிட்டு சென்றனர்.
நாகூர் நகர செயலாளர் B.அபுசாலி சாஹிப் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வுகளில் மாவட்ட பொருளாளர் S.சதக்கத்துல்லாஹ், துணை செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது முன்னிலை வகிக்க Y.மஹ்மூது இபுராகிம், தம்ஜீதீன், மஞ்சை சதாம், M.K ஆஷிக் சாஹிப், P.அஷ்ரப் சாஹிப், A.ரஹீம், A.K செய்யது அலி, A.ரிஸ்வான், சாதிக், J.சாகுல் ஹமீது, யூசுப் இப்பரப்புரையில் பங்கேற்றனர்.
கடந்த அக்.02 முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் மது எதிர்ப்பு பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


