முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாகை மாவட்ட ஆட்சியரிடத்தில் மதுவிலக்கு கோரி மஜக மனு!




மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டம் சார்பில் தெற்கு மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமையில் கடந்த அக்.14, திங்கள்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நாகை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.பிரவீன்.பி.நாயர்., இ.ஆ.ப அவர்களை சந்தித்து பூரண மதுவிலக்கு கோரி மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் பொது மக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மார்க் கடை குறித்து மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் கலந்து கொண்டார்.

உடன் மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, மஹ்மூது இபுராகிம், நாகூர் நகர செயலாளர் அபுசாலி சாஹிப், நாகூர் ஜாகிர் ஹூசைன், சாகுல் ஹமீது ஆகியோர் இருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய ரமழானே வருக!

வன்முறையாளன்; வெள்ளை நிறவெறியன் ட்ரம்ப்!

முதலில் ஒரே ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தகவல்கள் வந்தன. பின்னர் இறந்தது நான்கு பேர் என்று தகவல்கள் வந்தன. கடைசியாக ஒரு போலீஸ்காரரும் இறந்திருக்கிறார். அவர் தலையில் Fire extinguisher எனப்படும் தீயணைப்பு சிலிண்டரை வைத்து அடித்துக் கொன்றிருக்கிறார்கள் போராட்டக்காரர்கள் எனப்படும் கலகக்காரர்கள் என்ற செய்தி வெளிவந்து நம்மை நடுங்க வைத்தது. அமெரிக்காவின் நாடாளுமன்ற இன்வேஷனின்போது நிகழ்ந்த உயிரிழப்புகள்தான் இவை. முதலில் இந்த வீடியோக்களைப் பார்க்கையில் என்டர்டெயினிங்காகத்தான் இருந்தது. பின்னர்தான் உண்மை உறைக்கத் துவங்கியது. உலகின் பெரியண்ணன் அமெரிக்கா.. உலகின் அனைத்து அரசியல் நகர்வுகளும் அமெரிக்காவாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அமெரிக்க தலை நகரை விடுங்கள்.. அமெரிக்க நாடாளுமன்றம் அவ்வளவு பாதுகாப்பு மிகுந்தது. நாடாளுமன்றத்துக்கு இரண்டு மைல் முன்பாகவே நமக்கான தடைகள் துவங்கி விடும்.. எதேச்சையாக தெருவில்தான் கார்கள் ஏதும் இல்லையே.. தெருவில் இறங்கி இந்தப் பக்கம் இருந்து அந்தப்பக்கம் போய்விடலாம் என்று ஒரு அடி எடுத்து வைத்தால் போதும்.. போலீசார் ஓடி வந்துவிடுவார்கள். துப...

ஆடு தாண்டும் காவிரி (மேக்கேதாட்டூ) அணை அனையா நெருப்பு..!!

         கர்நாடக மாநிலம், ராம்நகர்  மாவட்டம், மேக்கேதாட்டு! இங்கு காவிரி ஆறு ஓடக்கூடிய இரு மலைகளுக்கு இடையிலான இடைவெளி மிகவும் குறைவு. ஆழம் மிகவும் அதிகம். மேக்கேதாட்டு என்றால் தமிழில் ஆடு தாண்டும் காவிரி என்று பொருள். இந்த இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, இரு மலைகளுக்கு இடையே அணை கட்ட, கடந்த பல ஆண்டுகளாக கர்நாடக ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். அவ்வாறு அணை கட்டப்பட்டால் அதன் கொள்ளளவு 67.14 டி.எம்.சி-யாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அணையா?  நீர்த்தேக்கமா? : தமிழ்நாடு உள்ளிட்ட  கீழ்ப்பாசன மாநிலங்களிடமிருந்து அணை என்று சொன்னால் எதிர்ப்புகள் கிளம்பும், அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படும்  என்பதால் பெங்களூரு மற்றும் மாண்டியாவின் குடிநீர்த் தேவைக்காகவும், நீர்மின் உற்பத்திக்காகவும் மேக்கேதாட்டுவில் நீர்த்தேக்கம் அமைக்கப்போவதாக சொன்னது கர்நாடகம். அன்றைய முதல்வராக இருந்த சித்தராமைய்யா, 2013-ம் ஆண்டு, ₹5912 கோடி திட்டமதிப்பீட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஆய்வுப் பணிகளுக்கு அனுமதி கேட்டு 12.11.2014 அன்று மத்திய சு...