முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அனைவருக்கும் பொதுவானவர் நபிகள் நாயகம்! (திருச்சியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேச்சு!)

நவ. 25, திருச்சி - தென்னூர் வட்டார ஜமாத்துல் உலமா நடத்திய மீலாது சமூக நல்லிணக்க விழாவில் , கலந்துக் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA உரையாற்றினார்.அவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:- "இந்த சமூக நல்லிணக்க விழாவை இனி திறந்த வெளியில் நடத்திட நீங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேடையில் பேசுபவர்களிலும், பார்வையாளர்களிலும் சரி பாதியாக சகோதர சமூகங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்குமாறு திட்டமிட்டால், அது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த வருடம் இது போன்ற ஒன்று கூடலை எல்லோரும் சேர்ந்து உழவர் சந்தை திடலில் நடத்திட வேண்டும் என என் ஆவலை தெரிவித்துக் கொள்கிறேன். மீலாது விழா என்பது குறித்த  விவாதத்திற்குள் நாங்கள் செல்வதில்லை. அது இந்தியா போன்ற பன்மை கலாச்சார தேசங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புகளை எல்லோரிடமும் கொண்டு செல்ல இதுவும் ஒரு களம் என்று கருதுகிறோம். அதனால்தான் இதனை மீலாது சமூக நீதி விழா, மீலாது சமூக நல்லிணக்க பெருவிழா,சீரத்துன் நபி விழா என்ற பெயர்களில், எல்லா சமூக மக்களும் பங்கேற்கும் வக...

படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும்! ('கவிதை தேன்' நூல் வெளியீட்டு விழாவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேச்சு)

கவிஞர் காரை ஜின்னா அவர்கள் எழுதிய "கவிதை தேன்" என்ற நூலை நாகூரில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட, இந்திய தேசிய லீக்கின் அகில இந்திய பொதுச் செயலாளர் MGK நிஜாமுதீன் பெற்றுக் கொண்டார். நூலை வெளியிட்டு பொதுச் செயலாளர் பேசியதாவது:- நூல் வெளியீட்டு விழாக்கள் குறைந்து வருவதும், அதில் பார்வையாளர்கள் குறைந்து வருவதும் ஆரோக்கியமான விஷயமல்ல. அது போல், நூல் வாசிப்பாளர்கள் எண்ணிக்கையும்  குறைந்து வரும் நிலையில், படைப்பாளிகளின்  எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. முதிர்ச்சிமிக்க சமூக அமைப்பில் இது  குறித்து ஆராய வேண்டும். கவலைப்பட வேண்டும். நூல் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்  என கருதி பலரும் அஞ்சும் நிலை உருவாகி  உள்ளது. மலையாளம், வங்கம், மராட்டிய மொழிகளில் நூல்கள் வெளியாகி, ஒரே வருடத்தில் பல பதிப்புகளை காணுகின்றன. தமிழில் அந்த நிலை குறைந்து வருகிறது. தமிழக முஸ்லிம் சமூகம் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பணி ஆற்றியுள்ளது. தற்போது இதில் ஒரு சுணக்கம் நிலவுகிறது. நாகூர் என்பது  பல கவிஞர்களை, இலக்கியவாதிகளை, எழுத்தாளர்களை, கலை படைப்பா...