முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டநகல் கிழிப்பு போராட்டம்! தடையை மீறிய மஜகவினர் கைது!






மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்டத்தின் சார்பில் டிச.15 அன்று நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமையில் நடைப்பெற்றது.

மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாநில தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் முன்னிலை வகித்தனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல்துறை கெடுபிடிகளை மீறி குடியுரிமை சட்ட நகலை கிழித்தெறிந்தனர்.

இதில், மாவட்ட துணை செயலாளர்கள் முன்ஸி யூசுப்தீன், கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, சேக் அகமதுல்லாஹ், சபுருதீன், மு.மாவட்ட நிர்வாகி திருப்பூண்டி சாகுல் ஹமீது, மாவட்ட அணி நிர்வாகிகள் தெத்தி ஆரிப், சுல்தான், கீழையூர் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, நகர செயலாளர்கள் அஜீஜுர் ரஹ்மான், அபுசாலி சாஹிப், திட்டச்சேரி பேரூர் கழக செயலாளர் இபுராஹீம், ஷேக்பரீத், திருப்பூண்டி இப்ராஹீம், அஜீஸ், ஜாசிம், பொருள்வை ஜலால், மஞ்சை சதாம், வவ்வாலடி அன்சாரி, தோப்புத்துறை முபீன்,  அல்தாப், நிசாத், நாகூர் சாகுல் ஹமீது, ஷேக்அலி, கலிமுல்லாஹ், அப்துல் காதர், செமிருதீன், ஆதலையூர் சிராஜ், முத்து மரைக்கான், ஏனங்குடி யாசின், முத்து முகம்மது, அசார், சம்சுதீன், ஆசிஃப், இந்திய தேசிய லீக் நாகை மாவட்ட பொருளாளர் உமர் அலி, ஷேக்தாவூது மற்றும் மஜக உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் திரளாக பங்கேற்று கைதாகி பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய ரமழானே வருக!

வன்முறையாளன்; வெள்ளை நிறவெறியன் ட்ரம்ப்!

முதலில் ஒரே ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தகவல்கள் வந்தன. பின்னர் இறந்தது நான்கு பேர் என்று தகவல்கள் வந்தன. கடைசியாக ஒரு போலீஸ்காரரும் இறந்திருக்கிறார். அவர் தலையில் Fire extinguisher எனப்படும் தீயணைப்பு சிலிண்டரை வைத்து அடித்துக் கொன்றிருக்கிறார்கள் போராட்டக்காரர்கள் எனப்படும் கலகக்காரர்கள் என்ற செய்தி வெளிவந்து நம்மை நடுங்க வைத்தது. அமெரிக்காவின் நாடாளுமன்ற இன்வேஷனின்போது நிகழ்ந்த உயிரிழப்புகள்தான் இவை. முதலில் இந்த வீடியோக்களைப் பார்க்கையில் என்டர்டெயினிங்காகத்தான் இருந்தது. பின்னர்தான் உண்மை உறைக்கத் துவங்கியது. உலகின் பெரியண்ணன் அமெரிக்கா.. உலகின் அனைத்து அரசியல் நகர்வுகளும் அமெரிக்காவாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அமெரிக்க தலை நகரை விடுங்கள்.. அமெரிக்க நாடாளுமன்றம் அவ்வளவு பாதுகாப்பு மிகுந்தது. நாடாளுமன்றத்துக்கு இரண்டு மைல் முன்பாகவே நமக்கான தடைகள் துவங்கி விடும்.. எதேச்சையாக தெருவில்தான் கார்கள் ஏதும் இல்லையே.. தெருவில் இறங்கி இந்தப் பக்கம் இருந்து அந்தப்பக்கம் போய்விடலாம் என்று ஒரு அடி எடுத்து வைத்தால் போதும்.. போலீசார் ஓடி வந்துவிடுவார்கள். துப...

ஆடு தாண்டும் காவிரி (மேக்கேதாட்டூ) அணை அனையா நெருப்பு..!!

         கர்நாடக மாநிலம், ராம்நகர்  மாவட்டம், மேக்கேதாட்டு! இங்கு காவிரி ஆறு ஓடக்கூடிய இரு மலைகளுக்கு இடையிலான இடைவெளி மிகவும் குறைவு. ஆழம் மிகவும் அதிகம். மேக்கேதாட்டு என்றால் தமிழில் ஆடு தாண்டும் காவிரி என்று பொருள். இந்த இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, இரு மலைகளுக்கு இடையே அணை கட்ட, கடந்த பல ஆண்டுகளாக கர்நாடக ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். அவ்வாறு அணை கட்டப்பட்டால் அதன் கொள்ளளவு 67.14 டி.எம்.சி-யாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அணையா?  நீர்த்தேக்கமா? : தமிழ்நாடு உள்ளிட்ட  கீழ்ப்பாசன மாநிலங்களிடமிருந்து அணை என்று சொன்னால் எதிர்ப்புகள் கிளம்பும், அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படும்  என்பதால் பெங்களூரு மற்றும் மாண்டியாவின் குடிநீர்த் தேவைக்காகவும், நீர்மின் உற்பத்திக்காகவும் மேக்கேதாட்டுவில் நீர்த்தேக்கம் அமைக்கப்போவதாக சொன்னது கர்நாடகம். அன்றைய முதல்வராக இருந்த சித்தராமைய்யா, 2013-ம் ஆண்டு, ₹5912 கோடி திட்டமதிப்பீட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஆய்வுப் பணிகளுக்கு அனுமதி கேட்டு 12.11.2014 அன்று மத்திய சு...