காங்கிரஸ் கட்சியின் தற்போதைய பொருளாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான அகமது படேல் கொரோனா தாக்கத்தால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (நவ.25) மரணமடைந்திருக்கிறார். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளர். குஜராத்தின் பரூச் தொகுதியில் இருந்து மூன்று முறை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும், ஐந்து முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 28 வயதாக இருந்தபோது பரூச் மக்களவைத் தொகுதியில் இவரைப் போட்டியிட வைத்தார் இந்திரா காந்தி. பின்னர் 1980 மற்றும் 1984 தேர்தல்களிலும் அங்கு மீண்டும் போட்டியிட்டு வென்றார். 1984இல் அகில இந்திய காங்கிரசின் துணைச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் அகமது படேல். பின்பு 1986ஆவது ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார் அகமது படேல். 1985இல் ராஜீவ்காந்திக்கு அவர் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார். ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தபோது அவருக்கு எவ்வளவு நம்பிக்கைக்குரியவராக இருந்தாரோ அதே அளவு நம்பிக்கைக்குரியவராக சோனியா காந்...
எட்டுத்திக்கிழும் எட்டும் வரையிலும் மனிதநேயத்தைப் பரப்பிடுவோம்..!