முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வன்முறையாளன்; வெள்ளை நிறவெறியன் ட்ரம்ப்!


முதலில் ஒரே ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தகவல்கள் வந்தன.

பின்னர் இறந்தது நான்கு பேர் என்று தகவல்கள் வந்தன.

கடைசியாக ஒரு போலீஸ்காரரும் இறந்திருக்கிறார். அவர் தலையில் Fire extinguisher எனப்படும் தீயணைப்பு சிலிண்டரை வைத்து அடித்துக் கொன்றிருக்கிறார்கள் போராட்டக்காரர்கள் எனப்படும் கலகக்காரர்கள் என்ற செய்தி வெளிவந்து நம்மை நடுங்க வைத்தது.


அமெரிக்காவின் நாடாளுமன்ற இன்வேஷனின்போது நிகழ்ந்த உயிரிழப்புகள்தான் இவை.

முதலில் இந்த வீடியோக்களைப் பார்க்கையில் என்டர்டெயினிங்காகத்தான் இருந்தது. பின்னர்தான் உண்மை உறைக்கத் துவங்கியது.

உலகின் பெரியண்ணன் அமெரிக்கா.. உலகின் அனைத்து அரசியல் நகர்வுகளும் அமெரிக்காவாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அமெரிக்க தலை நகரை விடுங்கள்.. அமெரிக்க நாடாளுமன்றம் அவ்வளவு பாதுகாப்பு மிகுந்தது. நாடாளுமன்றத்துக்கு இரண்டு மைல் முன்பாகவே நமக்கான தடைகள் துவங்கி விடும்.. எதேச்சையாக தெருவில்தான் கார்கள் ஏதும் இல்லையே.. தெருவில் இறங்கி இந்தப் பக்கம் இருந்து அந்தப்பக்கம் போய்விடலாம் என்று ஒரு அடி எடுத்து வைத்தால் போதும்.. போலீசார் ஓடி வந்துவிடுவார்கள். துப்பாக்கி முனையில் நமமை கைது செய்வார்கள்.

கேப்பிட்டால் ஹில் எனப்படும் நாடாளுமன்றப் பகுதியில் வெறுமனே சுற்றித் திரிந்தால் கூட ஆயிரம் கேள்விகளை சந்திக்க நேரிடும்.

இவை அனைத்தையும் தாண்டி நாடாளுமன்றத்துக்கு அருகில் போவதே கடினமான விஷயம்.. நாடாளுமன்ற கட்டடத்துக்குள் போவதென்றால் அதற்கு அத்தனை ஆயிரம் நடைமுறைகள்.. 

இவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட பாராளுமன்றத்துக்குள் இந்த கலகக்காரர்கள் புகுந்திருக்கிறார்கள். உள்ளே போன நிறைய பேர் வாக்குமூலங்கள் கொடுக்கத் துவங்கி இருக்கிறார்கள். உள்ளே சென்று நிறைய பேர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். ரிலாக்சாக கஞ்சா புகைத்திருக்கிறார்கள். சபாநாயகர் நான்சி பெலோசியின் அறைக்குள் புகுந்து அவரது மேசையின்மீது கால் போட்டு அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

சில செனட்டர்களின் லேப்டாப்புகளைத் திருடிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். செனட்டர்களின் லேப்டாப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டு ரகசியங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது.

நடந்தது அனைத்துமே பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டம்.

உலக நாடுகள் அனைத்தும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தபடி இருககின்றன. இந்த போராட்டங்களுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்திலுமே எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றபடி இருக்கின்றன. அமைதியை விரும்பும் நாடான ஜப்பானில் கூட மக்கள் வீதியில்இறங்கி இந்த வெள்ளை இன வெறியர்களை எதிர்த்து கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.

ட்ரம்ப் கோட்டை கிடுகிடுத்துப் போயிருக்கிறது. ட்ரம்ப்பின் அடிவருடிகள் வரிசையாக ராஜினாமா செய்து வருகிறார்கள். அவரது முக்கியமான கால் நக்கிகளான மைக் பென்ஸ் மற்றும் பில் பார் இருவருமே அவரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள். மீடியா முன்பு காமெடியனாக சித்தரிக்கப்பட்ட முன்னாள் மேயரான ரூடி ஜூலியானி மட்டுமே ட்ரம்ப் உடன் நிற்கிறார். ட்ரம்ப்போடு சேர்வதற்கு முன்பு மிக மதிப்பிற்குரியவராக நடத்தப்பட்ட ரூடி தற்போது அனைத்து கவுரவங்களையும் இழந்து ஒரு மூன்றாந்தர கோமாளி மாதிரி பத்திரிகைகளால் சித்தரிக்கப்பட்டு வருகிறார். இந்த அவமானம் தாங்காமல் அவர் பெற்ற மகளே அவரை எதிர்த்து அறிக்கை விட்டது காலத்தின் கோலம்.

ட்ரம்ப் மீது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்று அவரது சொந்த கட்சியான ரிபப்ளிகன் கட்சியிலிருந்தே குரல்கள் கிளம்பி இருக்கின்றன. 

25 வது சட்டத்திருத்தம் எனப்படும் Twenty fifth amendment ஐ பயன்படுத்தி ட்ரம்ப்பை உடனடியாக பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெற்று வருகின்றன.

சபாநாயகர் நான்சி பெலோசி நீங்கள் இந்த இருபத்தைந்தாவது சட்டத்திருத்தத்தை உடனடியாக பிரயோகிக்காவிட்டால் நாங்கள் ட்ரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மறுபடி கொண்டு வருவோம் என்று மிரட்டி இருக்கிறார்.

மைக் பென்ஸ் தலைமையிலான ரிபப்ளிகன் செனட்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

வரிசையாக நடக்கும் ராஜினாமாக்கள் ட்ரம்ப்பின் தோல்வியை உறுதி செய்தபடியே இருக்கின்றன. ட்ரம்ப் அரண்டு போய் இருக்கிறார்.

உண்மையில் இந்த நாடாளுமன்றத் தாக்குதலை தூண்டிவிட்டதே ட்ரம்ப்தான்.. 

அவரது தோல்வி கடந்த தேர்தலில் உறுதியானதும் அதை ஒப்புக் கொள்ளாமல் ட்ரம்ப் பல வேலைகளைப் பார்த்தார்.

உண்மையில் இந்த நவம்பர் தேர்தல் கடுமையான கொடுந்தொற்றுக்கு நடுவில் நடந்தது. கொரோனவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளி வர பயந்து அமெரிக்க மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடந்த நேரம் அது. ட்ரம்ப் மட்டும் கொரோனா என்பதே ஒரு போலி பயமுறுத்தல். அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வாருங்கள். உங்கள் வேலைக்குச் செல்லுங்கள். கொரோனா உங்களை ஒன்றும் செய்யாது என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அதன் காரணமாக அமெரிக்காவில் கொரோனா சாவுகள் ஆயிரக்கணக்காக உயர்ந்தபடி இருந்தன. தங்கள் நெருங்கிய உறவினர்களே கொரோனாவில் இறந்தபோதும் ட்ரம்ப் சப்போர்ட்டர்கள் கொரோனா என்பது ஃபேக் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் மறுபுறம் பைடன் டீம் கொரோனா கொடுமையான தொற்று.. தயவு செய்து வீட்டுக்குள் இருங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருந்தது. இதற்குள் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலியாகிவிட்டார்கள்.

கொரோனா ஒன்றுமே இல்லை என்று சொன்ன ட்ரம்ப்புக்கும் கொரோனா வந்து அவரை எலாய் லிலி மற்றும் ரீஜெனரானின் மோனோக்ளோனல் ஆண்டிபாடி காக்டெயில் காப்பாற்றியது வேறு கதை.. ஆயினும் தனக்கே கொரோனா வந்தபோதும்.. தன் குடும்பத்துக்கே கொரோனா வந்தபோதும் ட்ரம்ப் தன் ஆதரவாளர்கள் மத்தியில் கொரோனா என்பதே ஃபேக் நோய் என்று பரப்பிக் கொண்டுதான் இருந்தார். தனது கொரோனா ட்ரீட்மெண்ட் முடிந்து வெள்ளை மாளிகைக்கு வந்ததும் அவர் செய்த முதல் காரியம் தன் முகத்தில் இருந்த மாஸ்க்கை கழற்றி எறிந்ததுதான். ஆக இந்த மாதிரி கொரோனாவை ஒன்றுமே இல்லை என்று தன் ஆதரவாளர்களை நம்பவைத்தபடி இருந்தவர்தான் ட்ரம்ப்.

அதன் காரணமாகவே தேர்தலின்போது மிகப்பெரிய பொதுக்கூட்டங்களில் அவர் பேசினார். அத்தனை கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கானோர் மாஸ்க் போடாமல் கலந்து கொண்டார்கள். அந்தந்த மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் நிறையத் துவங்கின. 

ஆனால் பைடன் டீம் கொரோனாவை சாதாணமாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஏற்பாடு செய்ததெல்லாம் ஆட்டோ ராலி எனப்படும் கார் பொதுக்கூட்டங்கள். அந்த பொதுக்கூட்டங்களில் கல்ந்து கொள்பவர்கள் தங்கள் கார்களில் மட்டுமே வர வேண்டும். காரிலிருந்து வெளிவரக் கூடாது என்பது மாதிரி கட்டுப்பாடுகள் விதித்தார்கள். அப்படியும் முன்னூறு நானூறு கார்கள் வந்து பொதுக்கூட்டங்களை சிறப்பாக்கினார்கள்.

ட்ரம்ப்போ பார்த்தீர்களா.. எனது பொதுக்கூட்டங்களுக்கு பத்தாயிரக்கணக்கில் லட்சக் கணக்கில் பொதுமக்கள் வருகிறார்கள். பைடனின் கூட்டங்களுக்கு வெறும் முன்னூறு நானூறு பேர்தான் வருகிறார்கள் என்று பெருமை பீத்தினார். 

உண்மையில் ட்ரம்ப் கூட்டங்களுக்கு வந்தபின் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அட்மிட் ஆனார்கள். ஆனால் பைடன் கூட்டங்களுக்கு வந்தவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை என்பதே உண்மை..

இந்த கொரொனா தொற்று காரணமாக தங்கள் ஆதரவாளர்களை தயவு செய்து வாக்கு சாவடிக்கு வராதீர்கள். உங்களது உயிர் முக்கியம். அதனால் அனைவரும் தபால் வோட்டுப் போடுங்கள் என்று பைடன் டீம் பிரச்சாரம் செய்யத் துவங்கியது.

பைடனுக்கு ஆதரவு பெருகுவதை ட்ரம்ப் கண் கூடாகப் பார்த்தார். பைடன்  வாக்காளர்கள் நிச்சயம் தபால் மூலம்தான் வோட்டுப் போடுவார்கள் என்பது அவருக்குப் புரிந்தது. ஆக இந்த தபால் வோட்டுகள் எண்ணப்பட்டால் தனக்கு தோல்வி உறுதி என்பது ட்ரம்ப்புக்குப் புரிந்தது. இந்த தபால் வோட்டுகளை செல்லாததாக்க அவர் உறுதி பூண்டார்.

தபால் மூலம் ஓட்டுப் போட்டது அனைத்துமே கள்ள ஓட்டு. அதை தடை செய்ய வேண்டும். சில வீடுகளின் பூனைகள் நாய்கள் பெயரில் கூட ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். அதை தடை செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்யத் துவங்கினார்.

அவர் எதிர்பார்த்தது மாதிரியே ட்ரம்ப் சப்போர்ட்டர்கள் அனைவரும் தேர்தல் நாளில் வந்து குத்து குத்தென்று ட்ரம்ப்புக்கு வோட்டு குத்தினார்கள். ஆனால் பைடன் சப்போர்ட்டர்கள் முன்னாலேயே தபால் வாக்குகளைப் போட்டு விட்டார்கள்.

வாக்கு எண்ணும் நாளும் வந்தது.

முதலில் தேர்தல் நாளன்று பதிந்த வோட்டுகளைத்தான் எண்ணுவார்கள்.

ஆக அந்த எண்ணிக்கையில் ட்ரம்ப் வாக்காளர்களின் வோட்டுகள்தான் அதிகம் என்று நிரூபணம் ஆனது. தேர்தல் தின வாக்குகளின்படி ட்ரம்ப் முன்னணியில் இருந்தார்.

பின்னர்தான் தபால் வோட்டுகளை எண்ண ஆரம்பித்தார்கள். அவற்றை எண்ண எண்ண ட்ரம்ப் பின்னடையத் துவங்கினார்.

உடனே ட்ரம்ப் கூவத் துவங்கினார். தபால் வோட்டுகள் அனைத்துமே கள்ள வோட்டுகள். நாய்களின் பெயரிலும் இறந்தவர்கள் பெயரிலும் டெமாக்ராட்டுகள்தான் வோட்டுப் போட்டிருக்கிறார்கள் என்று கூவினார். இதை நம்பிக் கொண்டு ஒரு பெரிய முட்டாள் கூட்டம் வீதிக்கு வந்து ஸ்டாப் தி ஸ்டீல் என்று கத்தத் துவங்கியது.  அதை ட்ரம்ப் சந்தோசமாகப் பார்க்கத் துவங்கினார். அவர் சொல்லும் அனைத்து பொய்களையும் அப்படியே நம்பும் கூட்டத்தை தனக்காக பயன்படுத்த துவங்கினார்.

“இந்தத் தேர்தலில் நமக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாங்கிய ஓட்டுகளை மறைத்திருக்கிறார்கள். இந்த அநீதி நிறுத்தப்பட வேண்டும்.. ஜோ பைடனின் வெற்றியை நாடாளுமன்றம் ஒப்புக் கொள்ளும் இந்த நாளில்அனைவரும் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்வோம்.. நானும் உங்கள் உடன் வருகிறேன்..”என்று மக்களை நாடாளுமன்றம் நோக்கி அழைத்தது ட்ரம்ப்தான்.

இந்தியாவில் போன்று ஃபேக் வாட்ஸ்ஆப் செய்திகளை நம்பிக் கொண்டு களமிறங்கிய முட்டாள்கள்தான் ட்ரம்ப்பின் இந்த அழைப்பை ஏற்று நாடாளுமன்ற முற்றுகையை செய்திருக்கிறார்கள்.

அந்த வெள்ளைச் சங்கிகள் நாடாளுமன்றம் நோக்கி நடந்தபோது அவர்களோடு ட்ரம்ப் வரவில்லை. தனது வெள்ளை மாளிகை வீட்டில் உட்கார்ந்து டிவியில் நடப்பதை எல்லாம் பார்த்தபடி இருந்தார் ட்ரம்ப்.

அந்த பொறுக்கிகள் ட்ரம்ப்பின் ஆதரவு இருக்கிறது என்று நம்பியபடி பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்கள் என்பதை விட அத்துமீறினார்கள் என்பதே உண்மை.

உலகின் மிக மிக பாதுகாப்பான நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து அனைத்து அக்கிரமங்களையும் அவர்கள் நிறைவேற்றினார்கள்.

இந்த அக்கிரமங்கள் அனைத்தையும் வெள்ளை மாளிகையின் பாதாள அறைக்குள் இருந்தபடி டிவியில் ட்ரம்ப் ரசித்துக் கொண்டிருந்தார் என்பதுதான் மிகவும் வெட்கக்கேடான விஷயம்.

அப்போதுதான் பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் நிகழ்வு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்த மாதிரி பொறுக்கிகள் நாடாளுமன்றத்தில் நுழைந்துவிட்டார்கள் என்ற தகவல் தெரிந்ததும் பாதுகாப்புப் படையினர் செனட்டர்கள் அனைவரையும் பாதுகாப்பாக கொண்டு சென்று பாராளுமன்றத்தின் ரகசிய நிலவறையில் சென்று ஒளித்து வைத்தார்கள்.

இருப்பதில் பெரிய கொடுமை என்னவென்றால் இந்த வெள்ளை சங்கிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷமிட்டு போராடிக் கொண்டிருந்தபோது பல போலீஸ்காரர்கள் அவர்களுக்கு கை கொடுத்து அவர்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதுதான்.

வெள்ளை இனவெறி அந்தளவுக்கு காவல்த்துறை உள்ளேயே கூட நிலை பெற்றிருக்கிறது என்பதற்கான உதாரணம்தான் இது.

உள்ளே பைடன் வெற்றியை உறுதிப் படுத்தும் தீர்மானம் நிறைவேறப் போகும் தருணம்.. எங்கிருந்தோ வந்த ஆணைப்படி மொத்த பொறுக்கிக் கூட்டமும் நாடாளுமன்றத்தை நோக்கி பேரிகேடுகளை உடைத்து முன்னேறுகிறது. சில போலீசார் தாமாக நாடாளுமன்றத்தின் கதவுகளை இந்த பொறுக்கிகளுக்கு திறந்து விடுகிறார்கள். இப்படியாகத்தான் அந்த கூட்டம் உள்ளே நுழைந்தது.

வாஷிங்டனின் நகர மேயர் போனில் மத்திய பாதுகாப்புப்படையின் உதவி உடனடியாக வேண்டும்என்று கெஞ்சுகிறார். மத்திய பாதுகாப்புப் படையினரோ எங்களை நீங்கள் அழைப்பதற்கான அனுமதி இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.

மேயரிடம் அனுமதி இல்லை. அனுமதி இல்லாவிட்டால்என்ன.. நீங்கள் வாருங்கள் என்று மேயர் கெஞ்சுகிறார்.

ஆனால் அனுமதி இல்லாமல் வர முடியாது என்று மத்திய பாதுகாப்புப் படையினர் அமைதி காக்கிறார்கள்.

அனுமதி வழங்க வேண்டிய ட்ரம்ப் தன் ரகசிய நிலவறையில் அமர்ந்தபடி நடக்கும் கூத்தை எல்லாம் ரசித்துக் கொண்டு அனுமதி வழங்காமல் அமைதி காக்கிறார்.

இன்றைக்கு ஐந்து உயிர்கள் பலியாகி இருக்கின்றன.

ட்ரம்ப்புக்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன. பல உலகத் தலைவர்கள் ட்ரம்ப்பின் பெயரைச் சொல்லியே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ட்ரம்ப்பின் ரிபப்ளிகன் கட்சியிலேயே ட்ரம்ப்புக்கு எதிரான குரல்கள் வலுப்பெற்று வருகின்றன. 

25 வது சட்டத்திருத்தத்தை அமல்ப்படுத்தப் போகிறீர்களா இல்லை நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவா என்று ரிபப்ளிகன்களை டெமாக்ரடிக் சபாநாயகர் நான்சி பெலோசி மிரட்டி வருகிறார்.

25 வது சட்டத்திருத்தத்தின்படி பதவி இறக்கப்பட்டால் ட்ரம்ப்புக்கு கேடுகாலம் ஆரம்பித்துவிடும்.

பயந்து போன ட்ரம்ப் உடனடியாக ஒரு வீடியோவின் மூலம் இந்த அட்டாக் செய்தவர்களை கண்டித்திருக்கிறார். இதை செய்தவர்ள் இதற்கான சட்டபூர்வமான தண்டனைகளை அனுபவித்தே தீர வேண்டும் என்று அந்த வீடியோவில் சொல்லி இருக்கிறார்.

ட்ரம்ப் இப்படி சொல்வார் என்று தெரியாத ட்ரம்ப் ஆதரவு முட்டாள்கள் அடுத்து ஜனவரி 20 அன்று பைடன் பொறுப்பேற்கும்போது இதை விட பெரிய கலவரத்தை ஏற்படுத்த பிளான் செய்தபடி இருக்கிறார்கள்.

குறைந்தது 500 பேர் இது சம்பந்தமாக அரெஸ்ட் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் குறைந்தது பத்து வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கலாம்.

ட்ரம்ப்பை நம்பி களத்தில் இறங்கியவர்ள் இனிமேல்தான் படாத பாடு படப் போகிறார்கள்.

இதில் இருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் இருக்கிறது.

ட்ரம்ப்பால் அமெரிக்க சமத்தன்மைக்கு ஆபத்து என்றதும் ட்விட்டர் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் அனைத்துமே ட்ரம்ப்பின் அக்கவுண்ட்டை நீக்கி விட்டன. அதிலும் மார்க் சுக்கர்பெர்க் ஃபேஸ்புக் ட்ரம்ப்பின் அக்கவுண்ட்டை நிறுத்தி வைத்ததற்கு என்ன காரணம் என்பதை விலாவாரியாகப் பதிந்திருந்தார். பொய்த் தகவல் காரணமாக இந்த அக்கவுண்ட் தடை செய்யப்படுகிறது என்று சொல்லி இருந்தார்.

ஒருயூதராக இருந்தபோதிலும் அமெரிக்கராக தன் கடமையை மார்க் செய்தார்.

ஆனால் இதே இந்தியா என்று வரும்போது இந்திய ஒற்றுமைக்கு எதிராக மாட்டுக்கறி வைத்திருந்தார் என்ற ஃபேஸ்புக் வதந்தியின் காரணமாக ஒரு முஸ்லிம் கொல்லப்படுகிறார்.

பங்களாதேசிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு இந்திய கூலிகளே ஃபேஸ்புக் இடுகையின் காரணமாக வீடுகள் அடித்து நொறுக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவுக்கு என்றால் ஒரு நீதி.. இந்தியா என்றால் ஒரு நீதி என்று இரு முகங்களோடு கடையை நடத்தி வரும் மார்க் சுக்கர்பெர்க்கை நாம் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டிய நேரமும் இதுதான்.

ஆக மார்க்கை கண்டிப்போம்.

பிடிக்கவில்லை என்றாலும் அமெரிக்க துயர் சம்பவங்களையும் கண்டிப்போம்

இரண்டில் மார்க்கை கண்டித்து நமது முகநூல் சுதந்திரத்தை மீட்பதே நமது முதல் கடமை என்பதால் #Be_Fair_Mark என்ற ஹேஷ் டாக்கை நான் பரிநதுரைக்கிறேன். இதை விட சிறப்பான ஹேஷ்டாக் இருந்தால் நண்பர்கள் பரிந்துரைக்க கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி: நந்தன் ஶ்ரீதரன் 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய ரமழானே வருக!

ஆடு தாண்டும் காவிரி (மேக்கேதாட்டூ) அணை அனையா நெருப்பு..!!

         கர்நாடக மாநிலம், ராம்நகர்  மாவட்டம், மேக்கேதாட்டு! இங்கு காவிரி ஆறு ஓடக்கூடிய இரு மலைகளுக்கு இடையிலான இடைவெளி மிகவும் குறைவு. ஆழம் மிகவும் அதிகம். மேக்கேதாட்டு என்றால் தமிழில் ஆடு தாண்டும் காவிரி என்று பொருள். இந்த இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, இரு மலைகளுக்கு இடையே அணை கட்ட, கடந்த பல ஆண்டுகளாக கர்நாடக ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். அவ்வாறு அணை கட்டப்பட்டால் அதன் கொள்ளளவு 67.14 டி.எம்.சி-யாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அணையா?  நீர்த்தேக்கமா? : தமிழ்நாடு உள்ளிட்ட  கீழ்ப்பாசன மாநிலங்களிடமிருந்து அணை என்று சொன்னால் எதிர்ப்புகள் கிளம்பும், அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படும்  என்பதால் பெங்களூரு மற்றும் மாண்டியாவின் குடிநீர்த் தேவைக்காகவும், நீர்மின் உற்பத்திக்காகவும் மேக்கேதாட்டுவில் நீர்த்தேக்கம் அமைக்கப்போவதாக சொன்னது கர்நாடகம். அன்றைய முதல்வராக இருந்த சித்தராமைய்யா, 2013-ம் ஆண்டு, ₹5912 கோடி திட்டமதிப்பீட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஆய்வுப் பணிகளுக்கு அனுமதி கேட்டு 12.11.2014 அன்று மத்திய சு...