முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இனிய ரமழானே வருக!

சமீபத்திய இடுகைகள்

வன்முறையாளன்; வெள்ளை நிறவெறியன் ட்ரம்ப்!

முதலில் ஒரே ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தகவல்கள் வந்தன. பின்னர் இறந்தது நான்கு பேர் என்று தகவல்கள் வந்தன. கடைசியாக ஒரு போலீஸ்காரரும் இறந்திருக்கிறார். அவர் தலையில் Fire extinguisher எனப்படும் தீயணைப்பு சிலிண்டரை வைத்து அடித்துக் கொன்றிருக்கிறார்கள் போராட்டக்காரர்கள் எனப்படும் கலகக்காரர்கள் என்ற செய்தி வெளிவந்து நம்மை நடுங்க வைத்தது. அமெரிக்காவின் நாடாளுமன்ற இன்வேஷனின்போது நிகழ்ந்த உயிரிழப்புகள்தான் இவை. முதலில் இந்த வீடியோக்களைப் பார்க்கையில் என்டர்டெயினிங்காகத்தான் இருந்தது. பின்னர்தான் உண்மை உறைக்கத் துவங்கியது. உலகின் பெரியண்ணன் அமெரிக்கா.. உலகின் அனைத்து அரசியல் நகர்வுகளும் அமெரிக்காவாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அமெரிக்க தலை நகரை விடுங்கள்.. அமெரிக்க நாடாளுமன்றம் அவ்வளவு பாதுகாப்பு மிகுந்தது. நாடாளுமன்றத்துக்கு இரண்டு மைல் முன்பாகவே நமக்கான தடைகள் துவங்கி விடும்.. எதேச்சையாக தெருவில்தான் கார்கள் ஏதும் இல்லையே.. தெருவில் இறங்கி இந்தப் பக்கம் இருந்து அந்தப்பக்கம் போய்விடலாம் என்று ஒரு அடி எடுத்து வைத்தால் போதும்.. போலீசார் ஓடி வந்துவிடுவார்கள். துப

லால்பேட்டையில் மஜக கொடியேற்று விழா!

டிச.04, கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை கைகாட்டி மற்றும் சாவடி உள்ளிட்ட இடங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடிகள் ஏற்றும் நிகழ்வு எழுச்சியோடு நடைப்பெற்றது. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தந்திருந்த மாநில பொருளாளர் S.S ஹாரூன் ரசீது அவர்கள் எழுச்சிமிகு கோசங்களுக்கு மத்தியில் அவ்விடங்களில் கொடிகளை ஏற்றி வைத்தார். இதில் மாநில துணை செயலாளர் இப்ராகிம், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் ஜாகீர் ஹுசைன் உள்பட மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

அகமது படேல் 71

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய பொருளாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான அகமது படேல் கொரோனா தாக்கத்தால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (நவ.25) மரணமடைந்திருக்கிறார். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளர். குஜராத்தின் பரூச் தொகுதியில் இருந்து மூன்று முறை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும், ஐந்து முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 28 வயதாக இருந்தபோது பரூச் மக்களவைத் தொகுதியில் இவரைப் போட்டியிட வைத்தார் இந்திரா காந்தி. பின்னர் 1980 மற்றும் 1984 தேர்தல்களிலும் அங்கு மீண்டும் போட்டியிட்டு வென்றார். 1984இல் அகில இந்திய காங்கிரசின் துணைச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் அகமது படேல். பின்பு 1986ஆவது ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார் அகமது படேல். 1985இல் ராஜீவ்காந்திக்கு அவர் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார். ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தபோது அவருக்கு எவ்வளவு நம்பிக்கைக்குரியவராக இருந்தாரோ அதே அளவு நம்பிக்கைக்குரியவராக சோனியா காந்

புயல் தருணங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

வங்கக் கடலில் உருவாகும்  'நிவர்' புயல் தமிழக கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.  இது காரைக்கால் - மாமல்லபுரம் இடையே வரும் 25-ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், பொதுமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்: புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம்.   அதனால் குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர காலம் மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.  உறுதியான கயிறுகள், காற்றை சமாளித்து எரியும் அரிக்கேன் விளக்குகள் வைத்திருக்க வேண்டும்.  மேலும் பாட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், பேரிச்சை, திராட்சை போன்ற உலர்ந்த பழ வகைகள், வறுத்த வேர்க்கடலை மற்றும் மூக்குக் கடலை, மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். இதுமட்டுமல்லாது அடையாள ஆவணங்களான ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாக்

புயல் வீசும் போது செய்யும் பிரார்த்தனை! (ஓதும் துஆ)

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[F]ஹா வகைர மா உர்ஸிலத் பி(B]ஹி. வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[F]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B]ஹி இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1496

சிதம்பரத்தில் மஜக கொடியேற்று விழா!

சிதம்பரம் பூதகேணியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடிக்கம்பம் புதுபிக்கப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி செப்.06 மாலை நடைப்பெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.